என்னை தெரிவு செய்தால் கைத்தொழில் திட்டம் உருவாகும்

நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பண்டாரவளை வர்த்தக சமூகத்தினருடன் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலினபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்றை உருவாக்கல், அனைத்து விவசாயிகளுக்கும் உரமானியம் வழங்குதல் என்பன எனது பிரதான இலக்காகும்.

நான் ஜனாதிபதியாகிய ஒருவாரத்தில் பண்டாரவளை பிரதேச வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதாகவும் பண்டாரவளை மொத்த விற்பனை நிலையத்தை அபிவிருத்தி செய்வதாகவும் உறுதியளிக்கின்றேன்.

அத்துடன் பண்டாரவளை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய உபாய மார்க்கம் கையாளப்படும். அவற்றில் நில கீழ் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் முக்கியதுவம் பெறும்.

ஒட்டு மொத்தமாக குறுகியகால செயற்றிட்டத்தின் மூலம் பண்டாரவளை நகரத்தை துரிதகதியில் அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். நுகர்வோரையும், வாடிக்கையாளரையும் பாதுகாக்கும் செயற்றிடத்தை நடைமுறைப்படுத்தவும், அனைத்து விவசாய மக்களுக்கும் உரமானியத்தை வழங்கவும் எண்ணியுள்ளேன்.

ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என மேலும் தெரிவித்தார்.

No comments