கோத்தாவின் தேர்தல் பிரச்சாரம்: சவேந்திரவிற்கு தொடர்பு இல்லையாம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துக்கு இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஒளிப்படம் மற்றும் கருத்து பயன்படுத்தப்பட்டுள்ள விடயத்துடன், இராணுவத் தளபதி எந்த விதத்திலும் தொடர்புபடவில்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்தை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவருக்கு எதிராக தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையம் முறைப்பாடு வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடும்போதே இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா 2009ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்து, அவருக்குத் தெரியாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவரது அறிக்கை மற்றும் ஒளிப்படம் இந்தப் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டதை இராணுவத் தளபதி அறிந்திருக்கவில்லை.

அவருடன் ஆலோசிக்கப்படாததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments