தொடரும் கைதுகள்; கைக் குண்டு வைத்திருந்தவர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்தே நேற்று (15) இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்து தப்பி சென்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தே நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments