சஜித்தின் பிரச்சார கூட்டங்கள் யாழ்,வவுனியாவில்?


ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அவரின் தலைமையில் நாடு முழுவதும் 151 பொதுக் கூட்டங்களை நடாத்த அக்கூட்டணி தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலும் தனது பிரச்சாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் முதலாவது கூட்டம் திஸ்ஸமஹாராமயில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயர் பிரேரிக்கப்பட்டு ஆமோதிக்கப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

No comments