துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலியான சம்பவத்தில் மூவர் கைது!

மட்டக்களப்பு - கரடியனாறு, கித்துள் கட்டுப் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் 14 வயதான சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

4 பேரடங்கிய குழுவொன்று நேற்று மாலை, வேட்டையாடுவதற்கு சென்ற நிலையில் அவர்கள் கொண்டுசென்ற கட்டுத்துவக்கு தவறுதலாக இயங்கியதில் சிறுவன் அச்சிறுவன் உயிரிழந்தான்.

இதனையடுத்து, சிறுவனுடன் வேட்டையாடுவதற்கு சென்ற (14), (20), (22) வயதுடைய மூவரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

No comments