அதிவேகத்தால் பறிபோனது இளைஞன் உயிர்

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிளங்குளம் பகுதியில் நேற்று (28) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாலமோட்டை பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் இரவு 11 மணியளவில் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் இறம்பைகுளம் சந்தியிலிருந்து, தனது வீடு நோக்கி பயணித்துகொண்டிருந்தார். மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருருந்த போது அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகில் இருந்த மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதனால் தூக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயமடைந்த நிலையில் அவசர அம்புயூலன்ஸ் மூலம்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட முன்னமே இளைஞர் சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் பிரிந்தன் (வயது 20) என்றே இளைஞரே உயிரிழந்துள்ளார்.

No comments