வேலை நிறுத்தம் தொடர்கிறது; மக்கள் பாதிப்பு!

போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு, நாளைய தினம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் ரயில்வே தொழிற்சங்கத்தினர் மற்றும் கடந்த தினங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனைய தொழிற்சங்கத்தினருடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், உரிய தீர்வு கிடைக்கும் வரை, தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி இவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. இதனால் மக்கள் அசொளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

No comments