கொழும்பில் பதுங்கியிருக்கும் அமெரிக்க படைகள்:பரபரப்பு?


ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் மத்தியில் இலங்கையில் அமெரிக்க படை வீரர்கள் 700 பேர் அளவில் தற்பொழுது தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படைவீரர்கள் வெளிநாட்டு தூதுவர்களுக்கு உள்நாட்டில் வழங்கப்படும் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும் இந்த அமெரிக்க படைவீரர்கள் பலர் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியுள்ளதாகவும், இவர்கள் எடுத்துவந்த பைகளை குறித்த ஹோட்டல்களில் உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் பரிசோதனை மேற்கொள்ள முற்பட்ட போது அதற்கு அவர்கள் அனுமதி மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பின்னர், அமெரிக்க தூதரகத்திலுள்ள வாகனமொன்று குறித்த ஹோட்டலுக்கு வந்து அப்பெட்டியை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஹோட்டலுக்கு பெட்டிகளுடன் வருகை தந்தவர்கள் அமெரிக்க தாக்குதல் ஆலோசகர்கள் இருவர் என தகவல் வட்டாரங்கள் மூலம் அறியவந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அமெரிக்க படை வீரர்கள் இருப்பதை அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments