கூட்டமைப்பினை பொருட்படுத்தவில்லை:சஜித்?


கூட்டமைப்பு போன்ற சிறு கட்சிகளது நிபந்தனைகளிற்கு தான் கட்டுப்படப்போவதில்லையென  தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தானே ஜனாதிபதி வேட்பாளர் என்பதை மீள வலியுறுத்தியுள்ளார்.


ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள குழப்ப நிலைக்கு கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பினை நடத்தி கட்சியின் சார்பில்  ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்ததாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்டுமாறு சதித் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இது தொடர்பான கடிதம் ஒன்றையும் தான் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கையளித்தாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சகல தகுதிகளும் தனக்கு உள்ளதாகவும், அதற்கான மக்கள் ஆணை தனக்கு இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்துள்ளார்.

கூட்டமைப்பு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை முன்னிறுத்தி பேச்சிற்கு சஜித்தை அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments