உடைக்க முற்படும் கூட்டமைப்பு?

காணாமல் போனோர் அமைப்புக்களை உடைக்க கூட்டமைப்பு முற்படுகின்றதென காணாமல் போனோர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.
கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை. அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர்  தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பொதுப் பிரச்சினைகள் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் திறமைவாய்ந்த சட்டத்தரணியாக இருக்கும் சுமந்திரனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏன் குறித்த விடயம் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்டபோது, இதன்போது பதில் வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார்,
 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விலைபோய்விட்டார்கள்.தமது பதவிகளும் சுகபோகங்களுமே இவர்களுடைய குறிக்கோள் எனவும் நீராவியடி சம்பவத்தில் சட்டத்தரணிகள் குரல்கொடுத்திருந்தார்கள். ஆனால் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சம்பந்தன் ஐயா இதுவரைக்கும் வாய்திறந்து கதைக்கவில்லை. 300 கோடி ரூபா வீட்டை வாங்கியவரால் வாய்திறந்து கதைக்க முடியாது. இதேபோல சுமந்தரனும் அதற்கு அடிமை எனவும்  குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

No comments