நான் ஓய்வு பெறவே மாட்டன், சிறிசேன அடம் பிடிப்பு;

ஒழுக்கமான நாட்டை, குழந்தைகளை உருவாக்குவதே எனது நோக்கம். எனவே நான் ஓய்வு பெற மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (28) பொலனறுவையில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும்,

ஓய்வு பெறும் தேவை எனக்கில்லை. நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான செயற்றிட்டங்களை தொடர நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தல் வருகிறது. எனது கதை இத்துடன் முடிந்துவிட்டதாக சிலர் நினைக்கலாம். ஆனால் டிசெம்பருக்குப் பிறகு வரும் பெரும் மாற்றத்தில் நாட்டின் அபிவிருத்தியுடன் பொலனறுவை அபிவிருத்தியையும் நான் மேற்கொள்வேன். - என்றார்.

No comments