போதைப்பொருள் வியாபாரிகள் , பாவனையாளர்களால் அல்லப்படும் திருநெல்வேலி சந்தை




யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சந்தைக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது 

திருநெல்வேலி சந்தையில்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை , சந்தைக்குள் சனநெருக்கடி மிகுந்த நேரம் இளைஞன் ஒருவர் கடும் போதையில் தனது ஆடைகளை களைந்து , சந்தை வியாபரிகள் மற்றும் மக்களுடன் தகாத வார்த்தைகளால் பேசி வம்பிழுத்துக்கொண்டும் , வியாபாரங்களும் இடையூறு விளைவித்த வண்ணம் இருந்துள்ளார். 

அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தராத நிலையில் , இளைஞனின் பாட்டி முறையான வயோதிப பெண்ணொருவர் இளைஞனை அவ்விடத்தில் இருந்து அழைத்து செல்ல முற்பட்ட வேளை , இளைஞன் போதையில் வயோதிப பெண்ணையும் தாக்க முற்பட்டுள்ளார். 

அதேநேரம் சம்பவம் தொடர்பில் அறிந்து இளைஞனின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சந்தைக்கு விரைந்து வந்து இளைஞனை அங்கிருந்து அழைத்து சென்றிருந்தனர். 

அதேவேளை திருநெல்வேலி சந்தை பகுதியில் போதை வியாபரிகள் மற்றும் , போதை பாவனையாளர்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சந்தை வியாபாரிகள் , சந்தைக்கு வருவோர் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்களை கொடுக்க வியாபரிகள் அச்சமுற்று உள்ளனர் ஆனால் , தமது வியாபர இடங்ககளில் பொருத்தப்பட்டுள்ள மற்றும் பிரதேச சபையினால் , சந்தைக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தால் , போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் , போதை பாவனையாளர்கள் தொடர்பிலும், அவர்களால் சந்தைக்கு வருவோர் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும். 

எனவே , இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதுடன் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை சந்தையில் இருந்து வெளியேற்ற நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். 

No comments