கித்துள் காட்டுக்குள் துப்பாக்கிச் சூடு சிறுவன் பலி!


மட்டக்களப்பு – கித்துள் காட்டு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளுர் தயாரிப்பிலான துப்பாக்கியொன்றுடன் நான்கு பேர் வேட்டைக்கு சென்ற நிலையில், குறித்த துப்பாக்கி தவறுதலான வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் கித்துள் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறிக்காந்தன் என் சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனரi;.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments