சொந்த ஊரிலேயே வாழ அனுமதி?


இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களில் இருவர் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்  என கண்டறியப்பட்டுள்ளனர்.கடல் தாண்டிய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவர்களில் இருவர் ஈழ அகதிகள் என அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களை; இலங்கையிலேயே உறவுகளுடன் இணைந்து வாழுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் 31ந் தேதி மண்டபத்தில் இருந்து பொன்ழகு என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க புறப்பட்ட பொன்ழகு, சுகுமார்,கணேசன்,ஜாக்சன் ஆகிய நான்கு பேரும் கச்சத்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதாகியிருந்தனர்.

குறித்த மீனவர்கள் நால்வரையும் கைதுசெய்து யாழ்ப்பாணம் நீரியல்வளத்முறைத் திணைக்களத்தினரிடம் கையளித்தனர். இவ்வாறு கையளித்த நால்வரையும் திணைக்களத்தினர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர் செய்த நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விளக்க மறியலில் இருந்த நால்வரும் நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் முன்னிலையில் ஆஜர்; செய்தவேளையில் பொன்னழகு,சுகுமார் ஆகிய இரண்டு மீனவர்களையும் எதிர்காலங்களில் இலங்கை கடல் எல்லைக்குள் வரக் கூடாது என எச்சரித்து நிபந்தனைகளுடன் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதேநேரம் ஏனைய இரு மீணவர்களான கணேசன் மற்றும் ஜாக்சன் ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள மன்னார் மற்றும் ,யாழ்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 2000மற்றும் 2006 ஆம் ஆண்டு இறுதி கட்ட போரின் போதே இந்தியாவிற்க்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் என்பதால் அவர்களது சொந்த ஊர்களில் தங்கலாம் என உத்தரவிட்டார்.

No comments