நீர்வேலி விபத்தில் இளைஞன் பலி?


நீர்வேலி சிறுப்பிட்டி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தொண்டைமானாற்றைச்சேர்ந்த அருந்தவராசா அரவிந்தன் எனும் 22 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளான்.

தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சிறுப்பிட்டியில் பருத்தித்துறை வீதியில் வேகமாக வந்த வான மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்திருந்தது.

நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இளைஞர்கள் இருவரும் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  அருந்தவராசா அரவிந்தன் உயிரிழந்துள்ளார்.

No comments