வவுனியாவில் நீதி கோரித் திரண்ட மக்கள்!!


அனைத்துலக காணாமல் போனோர் தினமான இன்று காணாமல் போனோருக்கு நீதி வழங்கக் கோரி வவுனியாவில் மாமெரும் போராட்டம் ஒன்று நடைத்தப்பட்டுள்ளது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் இக்று காலை 10.30
மணிக்குத் தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சென்றனர்.

வடக்குப் பகுதியைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் அதிகளவு இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றியுள்ளனர். பேரணியில் பங்குபற்றிய உறவுகள் '' காணாமல் போனோரை ஒப்படையுங்கள்'' , ''எங்களுக்கு நீதி வேண்டும்'' , ''காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம்'' என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இப்போராட்டம் வடக்கைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் காணாமல் போனோரின் உறவுகள், தமிழ் அரசியல் கட்சி சேர்ந்தவர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

No comments