பயங்கரவாதியின் உடற் பாகங்களை அகற்ற அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட சீயோன் ஆலயக் குண்டுத் தாக்குதல்தாரியான பயங்கரவாதி எம்.என்.எம்.அசாத்தின் உடற் பாகங்களை அங்கிருந்து அகற்றுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் இன்று (30) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த பயங்கரவாதியின் உட்பாகங்களை அங்கிருந்து அகற்றி பிறிதொரு இடத்தில் புதைக்க வேண்டும்  அரசாங்க அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று முன்தினம் குறித்த உடற்பாகங்கள் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமை தொடர்பில் பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments