வீணாகிப் போகுமோ சீமான் செய்த தவம்!

நாம் தமிழர் கட்சியின்  தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வெளியாக தயாராக இருக்கும் தவம் திரைப்படம் வாங்குவதற்கு யாரும் தாயாராக இல்லை. இதனால் இப்படம்  வெளியாவதில் சிக்கல் நிலவுவதாக திரையுலக வட்டடங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயத்தை மையப்படுத்தி சமூக நோக்கத்தோடு உருவாகியுள்ள இந்த தவம் திரைப்படம். விஜய் ஆனந்த் மற்றும் சூரியன் ஆகிய புதுமுக இயக்குனர்கள் இயக்கியுள்ள இந்த படத்தில் வசி மற்றும் பூஜாஸ்ரீ ஆகியோர் நடிக-நடிகையாக அறிமுகமாகியுள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் நடித்துள்ளதோடு படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களிலும் சீமான் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படம் பிடித்திருந்தபோதும் அதை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.

சீமான் அரசியல் களத்தில் பலரை சமரசம் இன்றி விமர்சித்து வருபவர். எனவே அவரின் பேச்சுக்களினால் பல மாற்று  அரசியல்வாதிகளை விரும்புபவர்களுக்குக்கு இந்த படத்தில்   அவர் இந்த படத்தில் நடித்திருப்பதால் பார்பதற்கு அக்ககறை காட்டமாட்டார்கள் என்றும் படத்தில் வரும் அவரின் அரசியல் கருத்துக்களால்  படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் திரையரங்க உரிமையாளர்களும் பட விநியோகம் செய்பவர்களும் வாங்குவதற்கு தயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.எனினும் படத்தை எப்படியாவது வெளியிட்டாகவேண்டும் என்று தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறார்.அப்படி இல்லை என்றால் வெளிநாடுகளிலாவது வெளியிடவேண்டும் எனும் நோக்கத்தில் இருக்கிறார்.

No comments