காஷ்மீரில் பதற்றநிலை; இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பல்லாயிரக்கணக்கில் இராணுவத்தனர் குவிக்கப்பட்டுள்ளதோடு சோதனை நடவடிக்கைகளும் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் டிஜிபிகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”அமைதி மற்றும் பொது நல்லிணக்கம்" பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக மற்ற மாநிலங்களில் விடுதிகளில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாநில மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு அமைதியைக் காக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புப் படைகள் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புக்களைப் பயன்படுத்தி, அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலையை அமல்படுத்த வேண்டுமென அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments