தள்ளாடிய காவேரி! வளைத்து பிடித்த கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல் கடந்த ஆண்டு தொடங்கிஇருந்தார். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே மக்களவை பொதுத் தேர்தலையும் சந்தித்தார். மாநிலம் முழுவதும் கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து, மக்களவை மற்றும் 17 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார்.எதிர்பார்த்த அளவினை விட  கொங்கு மண்டலத்திலும், நகர்ப்புற வாக்காளர்களிடமும் ஓரளவுக்கு ஆதரவு கிடைத்துள்ள நிலையில்  அடுத்து 2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கக்கான வேலைத்திட்டத்தில் இறங்கிவிட்டார் கமலஹாசன்.

அதன் ஏற்பாடாக கட்சிக்காக சொந்த தொலைக்காட்சி நிலையம் ஒன்றை
 தொடங்க கமல் முடிவு செய்துள்ளாராம். இதற்காக தற்போது தமிழகத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சியான காவேரி தொலைக்காட்சி பல நிர்வாக சிக்கலாலும் பொருளாதார நெருக்கடியாலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில்     அதனை விலை பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கமலின் 65-வது பிறந்த நாளான வரும் நவம்பர் 7-ம் தேதி புதிய சேனல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும்படியாக  மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரனும், கட்சிக்காக தொலைக்காட்சி தொடங்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments