செத்தவன்,கொன்றவன் அனைவரிற்கும் சேர்த்தே தூபி?


முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்களிற்கும் கொலை செய்த இலங்கைப்படைகளிற்கும் சேர்த்தே தூபி கட்டவுள்ளதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

அற்காக தமிழ்மக்கள் அனைவரும் இணைந்து இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வாக்களித்து கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்த்து வழங்கப்படுமென  டக்ளஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை(26) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவரிடம் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய  கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கேட்கின்றோம். இதற்கு காலதாமதம் தேவையில்லை. 

நாங்கள் இந்த விடயம் தொடர்பாக கோத்தபாய ராஜபக்சவுடன் பேசியுள்ளோம். அவரும் எமக்கு இதுதொடர்பான நம்பிக்கையைத் தந்துள்ளார்.  கோத்தபாய ராஜபக்ச தரப்பினரால் தான் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென நாம் நம்புகின்றோம். இதனால் தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பதென எமது கட்சி முடிவு செய்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

இந்நிலையிலேயே முள்ளிவாய்க்காலில் கோத்தபாயவின் ஆதரவுடன் தூபி கட்டப்போவதாக அவர் சொல்ல ஊடகவியலாளர்கள் குடைந்தெடுத்து கேள்வி கேட்க சீற்றமடைந்த டக்ளஸ் அனைவருக்கும் சேர்த்தே பொதுவான தூபி கட்டவுள்ளதாக தெரிவித்தார்.

No comments