ஆமி நின்றாலும் வழிபடலாம்:ஆனோல்ட்?


யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார்.

நாளை ஆரம்பமாகவுள்ள, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்த அடியார்கள், சோதனை நடவடிக்கையின் பின்னர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இதற்காக சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதனால், பக்த அடியார்கள், அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் எனவும், யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்;ட் அறிவித்துள்ளார். 

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், யாழ். மாநகர சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் நாவற்குழி,செம்மணி மற்றும் பிரதான வீதிகளில் பல இடங்களில் புதிதாக இராணுவ சோதனை சாடிகள் முளைத்துள்ளன.வாகனங்கள் இச்சோதனை சாவடிகளில் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.

இன்னொருபுறம் ஆலய சூழலில் உள்ள குடியிருப்புக்கள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments