ஜனாதிபதி தேர்தல்:தொடங்கியது பாய்ச்சல்?


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் எதிர்வரும் 5 ஆம் திகதி அமைக்கப்படவுள்ள ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு தீர்மானம் எடுத்துள்ளதாக அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்டார அதுகோரல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5 ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள தேசிய நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பிரபல உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இனியும் முன்னே கொண்டு முடியாது எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை வெற்றியடையச் செய்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் இன்றைய தேசிய வார இதழொன்றுக்கு அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோர் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகவும் பண்டார அதுகோரல மேலும் கூறியுள்ளார்.

No comments