ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?
மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் புகழ்பெற்ற அரச சேவை அதிகாரியொருவராக இருக்கலாம் என அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
அந்த வேட்பாளர் யார் என்பது குறித்து அடுத்த மாதம் நடுப் பகுதியில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி முன்னணி எனும் பெயரில் கூட்டணி சார்பிலேயே இந்த வேட்பாளர் நிறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டணியில் புத்திஜீவிகள், கலைஞர்கள், சிவில் அமைப்புக்கள், பல்துறை அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் அங்கம் வகிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment