மன்னாரில் எரிந்து சாம்பலாகியது புத்தகக் கடை!

மன்னார் புதிய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள புத்தகக் கடை ஒன்று தீயில் எரிந்து சாம்பலாகியது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மூடப்பட்ட கடைக்குள் தீ மூண்டு புகை வெளிவருவதை அவதானித்த நபர்கள் கடை உரிமையாளர், காவல்துறையினர் மற்றும் நகரசபைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உரிமையாளர் மற்றும் ஏனையவர்களும் தீயை அணைக்கப் போராடினர். நீர் கொள்கலன்களில் நீர் கொண்டுவரப்பட்டு சுமார் இரு மணிநேரம் போராடி தீ கட்டுகப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் கடை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. கட்டிடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. கடையில் சுமார் 7 இலட்சத்திற்கு அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
No comments