கோத்தா எந்நேரமும் கைதாகலாம்?


ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தாக்குதலாளி அடையாளங்காணப்பட்டுள்ளார்.கடந்த ராஜபக்ச ஆட்சியின் போது தாக்கப்பட்ட பத்திரிகையாளர் உபாலி தென்னகூனின் வாகனத்தில் காணப்பட்ட கைரேகைகள் அடிப்படையில் கைதாகியுள்ள சந்தேக நபாரான இராணுவ புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் லலித் ராஜபக்சவே லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ததாக குற்றவியல் புலனாய்வுத் துறையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொலைபேசி கோபுர தரவு பகுப்பாய்வு, உபாலி தென்னகூன் மீது தாக்குதல் நடத்தியவர்களின் தொலைபேசிகள் காலையில் கம்பஹாவில் உள்ள அவரது இல்லத்தை சுற்றி வெளிவந்ததாகவும், அதே நாளில் அந்த தொலைபேசி லசந்தா விக்கிரமதுங்க இல்லத்திற்கு அருகில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், லசந்h விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட நாளில் அவரது இல்லத்திலிருந்து அவரது அலுவலகத்திற்கு செல்லும் வழியிலுள்ள தொலைபேசி கோபுரத்தை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். ஆதில் உபாலி தென்னகூன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள் பதிவாகியுள்ளன.
இதன் மூலம் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் இராணுவ புலனாய்;வு பிரிவினரால் கொலை முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகின்றது. 
இதன் தொடர்ச்சியாக கோத்தபாயவும் எந்நேரமும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments