கடைசி நேரத்தில் கட் அடித்த கோத்தா?
அடுத்த தேர்தலில் கோத்தாவை எப்படியேனும் ஜனாதிபதியாக்கிவிட கொழும்பு தமிழ் ஊடகத்துறையினை சேர்ந்த சிலர் மும்முரமாகியுள்ளனர்.அதில் முன்னாள் சுடரொளி ஆசிரியரும் தற்போது தமிழன் எனும் இணையத்ததை நடத்துபவருமான சிவராசா என்பவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நபரே சந்திப்புக்களிற்கு கொழும்பு தமிழ் ஊடக பிரதிநிதிகளை அழைக்கும் தரகு வேலையில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே இத்தகைய தரப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றை கோத்தா கடைசி நேரத்தில் கைவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அது தொடாபில் மேலும் தெரியவருகையில எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின்படி தமிழ் ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை.
கொழும்பு டொரின்டன் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று இரவு தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவின் இளைய புதல்வாரன ரோஹித்த ராஜபக்சவின் முழுமையான வழிநடத்தலில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ரோஹித்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, டலஸ் அழகப்பெறும, காஞ்சன விஜேவீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பிற்கு வருவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதித் தருணத்தில் அவர் தனது விஜயத்தை இரத்து செய்துவிட்டார்.
Post a Comment