முகநூல் தலைமையகத்திற்கு அனுப்பட்ட நச்சுப் பொதியால் பரபரப்பு!

முகநூல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு முகவரியிடப்பட்ட பொதி ஒன்றில் சரின் என்ற இரசாயணம் பூசப்பட்டு அனுப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பொதியைக் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முகநூல் அலுவலகத்தின் பாதுகாப்பு ஒழுங்குகள் அடிப்படையில் வரும் கடிதங்கள் மற்றும் பொதிகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

சரின் என்பது நரம்பு மண்டலத்தை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சு அமிலம் ஆகும். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த பொதியை யார் அனுப்பியது என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

No comments