ஜூலியன் அசாஞ்ஜிற்கு ஆதரவாக யாழில் போராட்டம்!


விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ஜ் மற்றும் தகவல் வெளியீட்டாளர் செல்சியா மானிங்கை பாதுகாக்க வலியுறுத்தி யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நாளை மாலை நடைபெறவுள்ளது.

வடக்கில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளன.இதற்கான ஆதரவு தேடும் நடவடிக்கையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நேற்று அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

ஜூலை 10 புதன் கிழமை யாழ்ப்பாண நகரத்தில் இப்போராட்டம் நடக்கவுள்ளது.

இதனிடையே போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக பல்கலைக்கழக நுழை வாயிலில் “ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்!” என்ற பதாதையை தொங்கவிட்டிருந்தனர்.


அதேவேளை ஜீலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்காக என்ற துண்டுபிரசுரத்தின் நூற்றுக்கணக்கான பிரதிகளை அவர்கள் விநியோகித்திருந்தனர்.

No comments