ஈபிடிபி மோசடி செய்யவில்லை: இரா.செல்வவடிவேல்

யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆட்சிக்காலத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கவில்லையென தற்போதை முதல்வர் ஆனோல்ட் ஏற்றுக்கொண்டுள்ளார்.அதே போன்றே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆனோல்ட்க்கு எதிராக வெளியே கட்சி தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.ஆனால் இன்னொரு புறம் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆட்சிக்காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் ஊழல் முறைகேடுகளை பற்றி ஆய்வு செய்யாதிருக்க ஈபிடிபி இரகசியமாக ஆதரவளிப்பதாக சொல்லப்படுகின்றதேயென ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

யாழ்.நகரிலுள்ள புல்லுக்குளத்தை குப்பைகள் மூலம் மூடி கட்டடம் கட்ட வழி செய்தவர் முன்னாள் மாநகர ஆணையாளராக இருந்த சீ.வீ.கே.சிவஞானமே.
அவ்விடத்தில் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவினால் கட்டப்பட்ட மாடிக்கட்டடத்தை கட்டிய ஒப்பந்தகாரர் மாநகரசபையிடம் கையளிக்க தயாராக உள்ளபோதும் அதற்கு மாநகர தற்போதைய முதல்வர் ஆனோல்ட் தயாராகவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெருமளவு நிதியை செலவளித்து முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆட்சி காலத்தில் மோசடி நடந்ததாக சொல்லி தற்போதைய முதல்வர் ஆனோல்ட்டினால் கூட்டப்பட்ட கூட்டத்தினால் ஏதும் நடக்கவில்லையெனவும் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் மேலும் தெரிவித்தார்.

No comments