இலங்கை காவல்துறை துப்பாக்கி சூடு:இளைஞன் பலி!


யாழ்ப்பாணம் - மானிப்பாய் - இணுவில் வீதியில் இலங்கைப்பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயதான தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிசார் உத்தரவை மீறி உந்துருளிகளை நிறுத்தாது ஆறு பேர் கொண்ட குழு பயணித்ததாகவும், அதனை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.

மானிப்பாய் பகுதியில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாளுடன் சென்ற கும்பல் ஒன்று பொலிசார் மீது தாக்குதல் நடத்த முயன்றபோதே, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மானிப்பாய் பூட் சிற்றிக்கு முன்பாக, இணுவில் வீதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை, மறித்தபோது அவர்கள் வாளால் வெட்ட வந்ததாகவும், அவர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் தர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இன்னொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

எனினும் கொலை செய்யும் நோக்கில் எதற்காக துப்பாக்கி சூடுநடத்தப்பட்டதென்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மணியந்தோட்டம்,வல்லிபுரம் பகுதியிலும் கொக்குவிலும் இவ்வாறான காரணத்தை முன்னிறுத்தி இலங்கை காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டினில் நான்கு அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டமை தெரிந்ததே. 

No comments