யாழுக்கு எடுத்து வரப்படும் 3 இலட்ம் லீட்டருக்கும் அதிகமான பெட்ரோல்


யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco ) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் நாளை புதன்கிழமை பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

நாளை புதன்கிழமை மட்டும் 3 இலட்சத்து 10ஆயிரத்து 200 லீற்றர் பெற்றோல் கொலன்னாவை மற்றும் காங்கேசன்துறை களஞ்சியங்களிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபன  எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments