அமெரிக்கா செய்தால் சரி!
ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சர்வதேச நடவடிக்கைகளில் ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வாழ்த்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் எனும அமைப்பு தெரிவித்துள்ளது.
“1950களிலிருந்து ஈரானில் நடந்துவருவதாக கூறப்படும் அரசியல் அடக்குமுறைகள், 1948 சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையிலும் நடைபெற்று வருகின்றன. காலனித்துவத்திற்கு முன் எங்களிடம் இருந்த அரசியல் உரிமைகள் மற்றும் இறையாண்மை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் மறுபரிசீலிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தாய்மார்கள் “காணாமல் போனோர் அலுவலகம்” (OMP) போன்ற உள்ளூர் ஆணையங்களை பயனற்றவை என நிராகரித்துள்ளனர். ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட உறவினர்கள் உண்மையை அறியாமல் உயிரிழந்துள்ளனர். இவ்வழைப்பு, தமிழ் மக்களின் வாழ்வும் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசர கோரிக்கையாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.என்றார்.

Post a Comment