அமெரிக்காவில் கடும் வெப்பம்! குளிர் கூடாரங்கள் அமைக்க ஏற்பாடு.


அமெரிக்காவின் பல பகுதிகளில் இந்த வாரயிறுதியில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன், போஸ்டன் போன்ற நகரங்களை வெப்பநிலை கடுமையாகப் பாதிக்கும் எனவும் இதனால் 
சுமார் 200 மில்லியன் பேர் பாதிக்கப்படுவர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் மேயர் மாநிலம் முழுவதும் அவசர நிலையை அறிவித்ததோடு சுமார் 500 'குளிர்விக்கும் நிலையங்கள்' திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல கனடாவில் க்யூபெக் (Quebec), ஒண்டாரியோ (Ontario) பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பருவநிலை மாற்றத்தால், எதிர்பாராமல் உலகின் பல இடங்களில் அதிகளவான வெப்பம் ஏற்படுவதாகப் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments