கல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை!

கல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது. இதன் நோக்கம் 

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளியை கூட்டுவதேயென வடகிழக்கு சிவில் சமூக அமைய பேச்சாளர் சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார்.

இந்த காவிக் கூட்டத்தின் உடனடி இலக்கு தமிழ் வாக்குகளை மொட்டுக் கட்சிக்கும் அதனோடு தொங்கிக்கொண்டு திரியும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கி நகர்த்துவதே என்பதில் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். இவர்களின் மூலதனம் முஸ்லிம் சமூகம் தொடர்பில் எமக்கிருக்கும் அச்சமும் பயமும் என்பதை நாம் உணர வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை ஏட்டிக்குபோட்டியாக உண்ணாவிரத போராட்ட களங்களை சந்திக்க தொடங்கியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக தமிழ் மக்களது போராட்டம் தொடர்கின்ற நிலையில் இன்று முஸ்லீம்கள் ஏட்டிக்குப்போட்டியாக கல்முனையில் உண்ணாவிரத போராட்டத்தைதொடங்கியுள்ளனர்.அதிலும் பௌத்த பிக்கு ஒருவர் இரு இனங்களிடையே மோதலை தோற்றுவிக்க போராட்ட களத்தில் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் ஒருபுறம் மகிந்த தரப்பினை சேர்ந்த கருணா முதல் வியாழேந்திரன் வரை களமிறங்க மறுபுறம் அத்துரலிய ரத்னதேரரும் வருகை தந்து ஆதரவளித்துள்ளார்.இவரை தாண்டி பெருமளவிலான புத்த பிக்குகள் போராட்ட களத்திற்கு வருகை தந்தவண்ணமுள்ளனர்.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசாவும் போராட்டத்திற்கு ஆதரவளித்து அங்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

No comments