நடுவானில் மோதிய வானூர்திகள்;5பேர் பலி!

கனடாவின்  உள்ள வான்கூவர் நகரிலிருந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை ‘ராயல் பிரின்சஸ்’  சொகுசு கப்பலில்  சுற்றுலா பயணம்  செய்தவர்களில்,
இரு பிரிவினர் ஏற்பாடு செய்து பயணித்த இலகுரக வானூர்திகள் வானத்தில் நேருக்குநேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  மற்றும் இருவரை காணவில்லையென்றும் சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றது.
காணாமல் போன இருவரையும்  தேடும் பணிகளோடு
விபத்துக்கான காரணம் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

No comments