ஈரான் மீது போர்!120,000 படைகள் தயார்!

ஈரான் மீது போர் தொடுக்கும்  நோக்கத்தில் மத்திய கிழக்கிற்கு 120,000 அமெரிக்கப் படைகளை அனுப்புவதற்கான இராணுவத் திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரிகள் விவாதித்து வருவதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது  எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதனை மறுத்துள்ளார்.

ஊடகவியலாளர் கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில்   "நான் இது போலி செய்தி என்று நினைக்கிறேன், சரியானத்தைத்தான் நான் செய்வேன், ஆனால், அதற்காக நாங்கள் எந்த திட்டமும் செய்யவில்லை.  நாங்கள் அவ்வாறு செய்யவேண்டும் என்று நினைத்தால்  இன்னும் அதிகமாக படைகளை அனுப்புவோம் என்கிறார்.

No comments