தடையை நீக்க சிறிதரன் கோரிக்கை!
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டுமென சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இன்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிறீதரன் வலியுறுத்தினார்.
குறிப்பாக, கனடா இவ்விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து தடையை நீக்குவதுடன், ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Post a Comment