தாயகம் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் ரி.ஐ.டி விசாரணை
தாயகம் திரும்புவோர் மற்றும் தாயம் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் பாலசுந்தரம் கேதீஸ்வரனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாண உப பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்காக தாயகம் திரும்புவோர் மற்றும் தாயம் திரும்பியோருக்கான உரிமைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு , யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

Post a Comment