ஈபிடிபி முகாம்களினுள் புதைகுழிகளா?
யாழ்ப்பாணத்தின் சிறீதர் திரையரங்கில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்தினை தொடர்ந்து இன்று ஊர்காவற்றுறையில் உள்ள குருமடம் முகாமும் சோதனையிடப்பட்டுள்ளது.
அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குற்றப் புலனாய்வு அணியினரே நேற்றும் இன்றுமாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற அனுமதிகளைப் பெற்றே சோதனை நடவடிக்கைகள் தொடர்வதாக காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறீதர் திரையரங்கில் இடம்பெற்ற சோதனைகளில் ஒரு உரோமத்தை தானும் கைப்பற்ற முடியவில்லையென முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களிடையே சவால் விடுத்திருந்த நிலையில் முறைப்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து சோதனைகள் இடம்பெறுகின்றதாவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.
அரச துணைப்படையாக ஈபிடிபி குழு செயற்பட்ட காலப்பகுதியில் ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்குதல்களில் தொடர்புபட்டதாக குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டே வந்திருந்தது.
எனினும் அத்தகைய குற்றச்சாட்டுக்களை ஈபிடிபி தலைமை மறுதலித்துவந்திருந்தமை குறிப்பிடத்தக்கத,

Post a Comment