ரஷ்யா மீதான தடைகள் மற்றும் சுங்க வரிகளை ரத்து செய்த டிரம்ப்: அமெரிக்காவின் தேசிய நலனே காரணம் என விளக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீதான புதிய தடைகள் மற்றும் சுங்க வரிகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே அவற்றை ரத்து செய்வதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த முடிவு அமெரிக்காவின் தேசிய நலனுக்கு உகந்தது என அவர் காங்கிரஸிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம், ரஷ்ய அரசாங்கம், இராணுவ அதிகாரிகள், முக்கிய வங்கிகள் மற்றும் ரஷ்யாவின் நிழல் கப்பற்படை ஆகியவற்றைக் குறிவைத்து, “லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம், 2026” என்ற சட்டத்தை டிரம்ப் அமல்படுத்தியிருந்தார். ரஷ்யப் பொருட்கள் மற்றும் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவைத் தொடர்ந்து வாங்கும் சில நாடுகளின் பொருட்கள் மீதும் சுங்க வரிகளை விதிக்க இந்தச் சட்டம் வழிவகுத்தது.

Post a Comment