ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு; 309 பேர் காயம்
சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள விமானப் போக்குவரத்து வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சவூதி பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தனது ஆரம்பகட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 12 பேரில் நான்கு சவூதி நாட்டவர்களும், இரண்டு பங்களாதேஷ் நாட்டவர்களும் அடங்குகின்றனர். மேலும், அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த 309 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர் என விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலின் பின்னணி, அதற்குப் பொறுப்பான தரப்பினர் மற்றும் விமான நிலையத்தின் சேவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மேலதிக தகவல்கள் வழங்கப்படவில்லை.

Post a Comment