இனி 4ம் மாடியில்லை:புதிதாக 7ம் மாடி!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தடுப்பு முகாமமாக  இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்  வர்த்தமானி வெளியீடு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு முகாம் நிலையமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற தனது அதிகாரத்திற்கு அமைய, 2026 ஒக்டோபர் 06 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இப்பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 05 இல் உள்ள தொழில் செயலகக் கட்டிடத்தின் (டுயடிழரச ளுநஉசநவயசயைவ டீரடைனiபெ) 7 ஆம் மாடியில் இயங்கிவரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக வளாகமே இவ்வாறு தடுப்பு முகாம் நிலையமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களால் 2026 செப்ரெம்பர் 17 ஆம் திகதியன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (Pவுயு) 9 ஆம் பிரிவானது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களை விசாரணைக்காகத் தடுத்து வைப்பதற்குரிய இடங்களை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பிரகடனப்படுத்த அதிகாரம் வழங்குகின்றதென வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments