உறவு கசந்தது!
செம்மணி மனிதப் புதைகுழிக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளமை டக்ளஸை சீண்டியுள்ளது.
நான் சொந்த விடயத்திலேயே டக்ளஸால் பாதிக்கப்பட்ட ஒருவன். நான் 2005 ஆம் ஆண்டு சமாதான காலத்திலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பரிந்துரையிலேயே யாழ்.மாநகரசபையின் ஆணையாளராக மீள் நியமனம் செய்யப்பட்டேன். அதன் பின்னர் இரு தடவைகள் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் சார்பில் போட்டியிட்டேன்.
அதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டியவர் டக்ளஸ் தேவானந்தா. அதனால் அப்போது என்னை அழைத்து அரசு கேட்டவேளை நான் மாநகர ஆணையாளர் பதவியை விட்டு விலகினேன்.
எனது பின்னர் எனது கட்சிக்கு அவரது கட்சியின் ஆதரவு தேவை என அவரிடம் நேரில் சென்று கேட்டேன். அவரும் ஆதரவு தந்தார் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டக்ளஸ் யாழ்.மாநகரசபையில் தமிழரசுக்கட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Post a Comment