பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணியின் சொகுசு வாகனம் பறிமுதல்
கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த என்பவருக்குச் சொந்தமான மோட்டார் வாகனம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தின் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் மோசடி செய்த நபர் ஒருவர், குறித்த மோட்டார் வாகனத்தின் குத்தகை (Leasing) தவணைப் பணத்தைச் செலுத்தியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.
குறித்த மோட்டார் வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கான பணம் ஈட்டப்பட்ட விதம் குறித்துத் தகவல்களை வழங்குவதற்கு வருணி போகஹவத்த தவறியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment