இலங்கை இராணுவம் கொன்றவர்களே!
செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள், 1996-ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுடையவைதான் என்று இலங்கை இராணுவத்தை சேர்ந்த சோமரத்ன ராஜபக்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மரண தண்டனை கைதியான அவர் செம்மணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மயானப் பகுதியில் உடல்கள் புதைக்கப்பட்டன என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனவே, தற்போது மயானப் பகுதியில் கண்டெடுக்கப்படும் உடல்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாகவே இருக்கக்கூடும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுடையவை என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?" என்று கேட்கப்பட்டதற்கு, "ஆம்" என்று சோமரத்ன ராஜபக்ஸ பதிலளித்ததாக தகவல் வெளியிட்டுள்ளது.
1999-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கூட்டுப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளின் அறிக்கைகள், 2025-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட புதைகுழி தொடர்பான விசாரணைக்கு நீதவானிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த ஆவணங்கள் தொலைந்து போயிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது," என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம்; தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சோமரத்னவிடமிருந்து புதிய வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செம்மணியில் புதைகுழியில் மீட்கப்பட்டவை கடந்த காலங்களில் நோயினால் உயிரிழந்தவர்களதாக இருக்கலாமென்ற சர்ச்சைக்குரிய அறிக்கையையடுத்து தமிழ் தரப்புக்கள் மீண்டும் சர்வதேச விசாரணையினை கோரியுள்ளன.
எனினும் இலங்கை அரசாங்கம், செம்மணி விசாரணைகளுக்குத் தேவையான நிதியையும் நீதித்துறை சுதந்திரத்தையும் வழங்கியுள்ளதாகக் கூறி, பொறுப்புக்கூறல் செயல்பாட்டில் சர்வதேச தலையீட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

Post a Comment