மீண்டும் கூடி கதைக்க தயார்!
தேர்தல் தோல்விகளின் பின்னராக மீண்டும் இணைந்து அரசியலில் செயற்பட தமிழ் தேசிய நிலைப்பாட்டை பேணும் கட்சிகள் முற்பட்டுள்ளன.அவ்வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான விசேட அரசியல் சந்திப்பொன்று நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெறுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில்உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்களில் இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்கள் நலன் சார்ந்து ஒன்றிணைந்து பயணிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.
குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் பொதுமக்களின் தீவிர பங்கேற்புடன் கூடிய பாரிய மக்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்ததுடன் நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் அதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பிலும் தீவிரமாகக் கலந்துரையாடப்பட்டதாக ஊடங்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment