நல்லூர் முருகனும் முடங்கினார்?
தெற்கு குண்டுவெடிப்பின் எதிரொலியாக பாதுகாப்பு காரணங்களால் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை அமைதியாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவத்தினைத்  தொடர்ந்து  பிற்பகல் முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா சக்தி, கிரியா சக்திகளாக விளங்கும் வள்ளியம்மை,தெய்வயானை நாயகியருக்கும் ஆலய வசந்தமண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து அலங்காரக் கந்தன் திருமணக் கோலத்தில் எழுந்தருளி  வெளி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கும் நிகழ்வு மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பின் நிமித்தம் வெளியே வந்த முருகன் வீதிவலம் வருவதை தவிர்த்து மீண்டும் இருப்பிடம் திரும்பியிருந்தார்.

முருகன் தனது திருமணத்தை மிக எளிமையாக நடாத்தி, வெளி வீதியுலா வராது , தேரடியை சுற்றி வந்து அருட்காட்சியளித்தார்.

யுத்த காலங்களில் கூட பொருட்படுத்தாது வீதி உலா வந்த முருகன் இம்முறை தேரடியுடன் முடங்கி கொண்டமை பக்தர்களிடையே கவலையினை தோற்றுவித்துள்ளது.

No comments