கட்டாய விடுமுறை - மைத்திரிக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் மனு

தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கு எதிராக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களையடுத்து அவை குறித்து முன்னரே எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும் அவற்றினை உதாசீனம் செய்தாக பொலிஸ்மா அதிபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரினை பதவியினை இராஜினாமாச் செய்துவிட்டு செல்லுமாறு ஜனாதிபதியால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. எனினும் பொலிஸ்மா அதிபரான பூஜித ஜயசுந்தர பதவிவிலக மறுத்திருந்தார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதியினால் பொலிஸ்மா அதிபரான பூஜித ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு அவருக்குப் பதிலாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொலிஸ்மா அதிபரான பூஜித ஜயசுந்தர உயர்நீதிமன்றில் அடிப்படை மனு தாக்கல் செய்துள்ளார்.

No comments