ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் - தாக்குதலை தடுக்க இணைய பாதுகாப்பாம்


தமிழ் ஈழம் சைபர் இணைய இராணுவக் குழுவினால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தொடரச்ச்சியாக மூன்று ஆண்டுகள் இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் தாக்குதலால் இலங்கை அரசாங்கம் கதிகலங்கியுள்ளது.

இந்நத ஆண்டு கட்நத மே 18 அன்று கட்டுநாயக்க விமான நிலைய சேவருக்குள் நுளைந்த ஈழம் சைபர் இணைய இராணுவப் பிரிவினர் விமான நிலைய கணனித் திரைகளில் புலிக்கொடியைப் பறக்கவிட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் இணையவழி தாக்குதல்களைத் தடுப்பதற்காக இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்ட வரைவு அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம், 19ஆம் திகதிகளில் நாட்டின் கணினி கட்டமைப்பில் இணையவழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சமூக வலைதளங்களின் மீதான பயன்பாடு சில காலம் தடை விதிக்கப்பட்டமை ஊடாக குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மே மாதம் 13 ஆம் திகதிவரை எவ்வித பாரதூரமான சம்பவமும் இடம்பெற்றிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையை அவதானிக்கும்போது, அது ஒரு புறத்தில் சாதமாக அமைந்துள்ளது என்று கூறலாம்.

எவ்வாறிருப்பினும், சமூகவலைதளங்கள் மீது தடை விதிப்பது ஒருபோதும் சிறந்ததல்ல என்றும் அஜித் பி பேரேரா கூறியுள்ளார்.

No comments